மதம் என்ற மலச்சாக்கடையில் எல்லாவகை மலமும் கலந்து கிடக்கின்றன. அதில் என் மலம்தான் சிறந்தது என ஒவ்வொரு பிரிவினரும், பெருமை பீத்திக் கொண்டிருக்கின்றனர். அது குல்லா போட்ட குலாமோ, குர்தா போட்ட பாதிரியாரோ, பூணூல் போட்ட பூசாரியோ எல்லோருமே எங்களுக்கு ஒன்றுதான்.எங்களுக்கு எல்லா மலமும் நாறும் என்ற அறிவு மட்டும்தான் தெரிகிறது.
.
மதத்தை பேசி எப்படி ஒரு கூட்டம் ஏமாற்றுகிறதோ அதே போல் நாத்திகத்தை பேசி ஏமாற்றும் நாத்திக வியாபாரிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. அந்த கூட்டம்தான் போயஸ் தோட்டத்திலும், கோபாலபுரத்திலும் பிச்சை எடுக்கிறது.அதை அறிவால்தான் கண்டு கொள்ள முடியும். எனவேதான், சிந்திக்கும் அறிவை பயன்படுத்துங்கள் என சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
.
அல்லாவை,இயேசுவை விட்டுவிட்டு ஏன் இந்துகடவுள்களை மட்டும் அதிகம் பேசுகின்றோம் என்றால், " செப்டிக் டேங்க்கில்" எது நிரம்பி வழிந்து நாற்றமெடுக்கிறதோ அதைதானே முதலில் சுத்தம் செய்ய வேண்டும். மற்ற இரண்டிலும் இறைவன் என்ற பெயரில் ஓரிருவரைத்தான் குறிப்பிடுகின்றனர். அதனால் கழிவு கொஞ்சம்தான். நாற்றமும் குறைவுதான். ஆனால், இந்து மக்களைப் போலவே, இந்துக் கடவுள்களும் அதிகம். அப்ப கழிவும், நாற்றமும் அதிகமாகத்தானே இருக்கும்.
.
வாய் கிழிய பேசும் எந்த இந்து நம்பிக்கைவாதிகளாலும் தன் மத கடவுள்கல்(!) எத்தனை என்று கூற முடியாது. காரணம், 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கையைவிட இப்போது புதுகடவுள்கல்(!) உற்பத்தி பெருகிவிட்டது. (வியாபாரம் பெருகணும் இல்ல?)
.
வாடிகனோ,மெக்காவோ அல்லது திருப்பதியோ எந்த வியாபார இடமும் சாக்கடைதான். உண்மையை சொல்லப் போனால் அவ்வளவு பெரிய சாக்கடையை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதனால்தான், சாக்கடையில் கலக்கும் மனிதர்களை தடுத்து சுத்தம் செய்ய முயற்சி செய்கின்றோம். இனியும் செய்வோம். ஏனென்றால், ஒருவகையில் நாங்களும் துப்புரவு தொழிலாளிகளே !
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011
சனி, 2 ஜூலை, 2011
எது அறிவு ?
பகுத்தறிவு என்பது யாரும் கற்று கொடுத்து வருவதல்ல.
ஒருவன் ஒரு செயலை,பொருளை ஏன், எதனால், எப்படி என சிந்திக்க ஆரம்பித்தாலே அவன் அறிவு தெளிந்து பகுத்தறியும் திறன் வந்துவிடும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு இதுதான் அப்பா, இதுதான் அம்மா, இதுதான் மாமா, இதுதான் ஆயா, இது (மட்டும்)தான் கடவுள் என பழக்கப் படுத்தப்படுகிறார்கள்.
மேலும், காலையில் எழுந்தவுடன் பல் விளக்கு, கழிவறைக்குச் செல், குளி என்பதுபோல கடவுளை வணங்குவதையும் பழக்கப்படுத்தும்போது, அந்த குழந்தை 50 வயதானாலும் அதே மாதிரிதான் செய்வான். அந்த பழக்கம் குணத்தில் ஊறிப் போய்விடும்.
எது சரி, எது முட்டாள்தனம் என்ற சிந்தனை தோன்றாத குழந்தை பருவத்திலேயே, மூட நம்பிக்கையை பழக்கப்படுத்துவதினால், அவனாக தன் அறிவை கொண்டு சிந்திக்காதவரை,அவன் தன் ஆயுள் வரை மூடனாகதான் இருப்பான். இடையில் எவரேனும் எடுத்துச் சொன்னால் கூட புரிந்துக் கொள்ள முடியாத முட்டாளாகதான் வாழ்வான். மூடனாய் பார்த்து திருந்தாவிட்டால், முட்டாள்தனத்தை ஒழிக்க முடியாது.
நம் நாட்டில் உண்மையான நாத்திகர்கள் 1% என்றால், மீதி 99% , அது எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் ஆத்திகர்கள்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இந்த 99% கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் வாழும் நாட்டில் ஏனய்யா இவ்வளவு பிரச்சினை, சண்டை, கலவரம் ?
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அடுத்தவனை ஏமாற்றாமல், அடுத்தவனுக்கு தீங்கு செய்யாமல், முக்கியமாக ஊழல்(லஞ்சம்) செய்யாதவன் எத்தனை சதவீதம் பேர் இருக்கிறீர்கள்?
இந்த நாட்டிலுள்ள 1% நாத்திகர்கள் அனைவரும் இந்த நாட்டைவிட்டு போய்விடுகிறோம். அதன் பிறகாவது உங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல் வாழ முடியுமா?
உங்கள் கடவுள் (மூட) நம்பிக்கையால் நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை., கேடுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் மனிதப் பிறவிக்கு தேவை ! அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்க்கு ஆண்டவன் தேவையில்லை.
நம் நாட்டில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமை இல்லை., எத்தனை அறிவுள்ள திறமைசாலிகள் உள்ளனர் என்பதில்தான் பெருமை !
1000 முட்டாள்களை விட, 5 புத்திசாலிகள் இருந்தாலே
நாடும், நம் வாழ்வும் மேன்மை அடைந்து விடும்.
அப்படிப்பட்டவர்களைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,
பெரியார் காலத்திலிருந்தே...!
வியாழன், 16 ஜூன், 2011
தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!
நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .
இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .
அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .
குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .
இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள் .
நன்றி ! உஜிலாதேவி வலைத்தளம்.
புதன், 15 ஜூன், 2011
வியாழன், 2 ஜூன், 2011
புதிய பாபா, வந்து விட்டார் !
இந்தியாவில் ஒரு பாபா செத்த இடத்தை பிடிக்க, இன்னோரு பாபா புறப்பட்டு விட்டார். அதற்கு ஒரு விளம்பரம் வேண்டுமல்லவா? அதான், ஊழல் ஒழிப்பு (உண்ணாவிரத) விளம்பரம். நம் நாட்டில் ஊழலைகூட ஒழிக்க முடியும். ஆனால், போலி(காவி)யை ஒழிக்க முடியாது. எல்லா தேனீக்கும் மலம் எது, மலர் எது எனத் தெரியும். ஆனால், நம் மக்களுக்கு தேனீயாக இருப்பதை விட, மலத்தில் அமரும் ஈ-யாக இருக்கத்தான் பிடிக்கிறது !
செவ்வாய், 3 மே, 2011
வெங்காய அறிவு என்றால் என்ன?
எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே, "வெங்காயம்" என்று தான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது. வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது உரிக்க உரிக்கத் தோலாகவே சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள்.
ஆகவே விதை வித்து இல்லாத காரணத்தால் தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமுமாகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.
------------------ தந்தைபெரியார் - "விடுதலை" 21-9-1973

பெரியார். . . .யார் ?
அங்கீகாரம் பெற்ற கட்சிகள் முதல், அ,ஆ கற்கும் கட்சிகள்வரை அனைத்து கட்சிகளும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. அது என்னவெனில், பெரியாரின் படத்தை, கட்சி தலைவரின் படத்திற்கு பக்கத்தில் பயன்படுத்திக் கொள்வதுதான். எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒரே மனிதர் பெரியார்தான். அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது, அதனால், அரசியலே வேண்டாம் என தன் இயக்கத்தை கடைசி வரை அரசியலில் கலக்க வில்லை.
பெரியார் ஒரு கடவுள் மறுப்புவாதி என்பதை மட்டுமே பிரபலப்படுத்தி, அவரின் மற்ற போராட்டங்களை பல மக்கள் மறந்து விட்டனர் (அ) மறக்கடிக்கப் பட்டனர். அய்யா ! அரசியல்வாதிகளே, உங்கள் சுயநல நாடகத்தை, குணம் மாறும் கூத்துக்களை, பேரம் பேசும் வியாபாரத்தை, எங்களிடம் திருடும் பணத்தில் எங்களுக்கே பிச்சை போடுவதை என எதை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள். தயவு செய்து, அவரின் படத்தை மட்டும் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், நீங்கள் சொல்லாத பெரியாரின் மேன்மையை,தியாகத்தை எங்கள் சந்ததியினர் தங்கள் பாட புத்தகத்திலாவது உண்மையாக தெரிந்துக் கொள்ளட்டும். அவரையும் அரசியல்வாதியாக மாற்றி விடாதீர்கள்.

இப்படியும் கொள்ளை அடிக்கலாம்
தமிழக அரசு விளம்பரங்கள் 10 விநாடிக்கு பணம் கொடுக்கப்படும் விகிதம் - கலைஞர் டிவி க்கு – ரூ.9700/- , சன் டிவி க்கு – ரூ.23,474-
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள் 3-4 நிமிடங்கள் அளவிற்கு
கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும்,
ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. அரசு செலவில் இப்படி முதல்வரும்,
துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து
வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை. அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில்,
இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி
இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள். கலைஞர் தொலைக்காட்சியின்
பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர். அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில்
இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு
பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?) அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ? எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா? மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)