அங்கீகாரம் பெற்ற கட்சிகள் முதல், அ,ஆ கற்கும் கட்சிகள்வரை அனைத்து கட்சிகளும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. அது என்னவெனில், பெரியாரின் படத்தை, கட்சி தலைவரின் படத்திற்கு பக்கத்தில் பயன்படுத்திக் கொள்வதுதான். எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒரே மனிதர் பெரியார்தான். அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது, அதனால், அரசியலே வேண்டாம் என தன் இயக்கத்தை கடைசி வரை அரசியலில் கலக்க வில்லை.
பெரியார் ஒரு கடவுள் மறுப்புவாதி என்பதை மட்டுமே பிரபலப்படுத்தி, அவரின் மற்ற போராட்டங்களை பல மக்கள் மறந்து விட்டனர் (அ) மறக்கடிக்கப் பட்டனர். அய்யா ! அரசியல்வாதிகளே, உங்கள் சுயநல நாடகத்தை, குணம் மாறும் கூத்துக்களை, பேரம் பேசும் வியாபாரத்தை, எங்களிடம் திருடும் பணத்தில் எங்களுக்கே பிச்சை போடுவதை என எதை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள். தயவு செய்து, அவரின் படத்தை மட்டும் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், நீங்கள் சொல்லாத பெரியாரின் மேன்மையை,தியாகத்தை எங்கள் சந்ததியினர் தங்கள் பாட புத்தகத்திலாவது உண்மையாக தெரிந்துக் கொள்ளட்டும். அவரையும் அரசியல்வாதியாக மாற்றி விடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக